சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும்- மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த நிலையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்.சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அசுரனுடன் மோத தயாரானதா ‘ஹீரோ’! சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து ஹீரோ திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாக உள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை KJR ஸ்டூடியோ தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படமானது டிசம்பர் 20ஆம் ஆம் தேதி, அதாவது, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதே … Read more

கிளிகளுடன் கொஞ்சு விளையாடும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபாமான நடிகையாவார். இவர் மதராசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்த இந்த திரைப்படம், தெலுங்கில் சிவகாசி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. மேலும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை வேதிகா தனது இன்ஸ்ட்டா  கிளிகளுடன் உணவு கொடுத்து, அவற்றுடன் விளையாடுவது போன்றுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     … Read more

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் தனுஷிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார் இவர். தனுஷிற்கு பெரிய ஹிட் படங்கள் என்பதை எளிதாக குறிப்பிட்டு விடலாம். ஆனால் அவரது ஒவ்வொரு படமும் தனுஷின் நடிப்புக்கான ஒவ்வொரு முயற்சி எனபதும், அதனை ஒவ்வொரு படத்திலும் மெருக்கேற்றிக்கொண்டே வருகிறார் என்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரியும். இவருக்கு தனக்குள்ளான நடிப்பை … Read more

பேய் விரட்டுவதாக கூறி குழந்தையை கொன்ற தாய்க்கு 25 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமெண்டோ நகரை சேர்ந்தவர் உன்ட்வான் ஸ்மித் .இவரது மனைவி ஏஞ்சலா பக்கின். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் மையா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு மையாக்கு பேய் பிடித்ததாக ஏஞ்சலா கூறினார். இதையடுத்து குழந்தையை வெயிலில் உட்கார வைத்தால் அவரது உடலில் உள்ள பேய் போய்விடும் என நினைத்து குழந்தையை காருக்குள் அமர வைத்து  காரை 10 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நிறுத்தினர். தனியாக … Read more

நீங்கள் அல்வா குடுத்து மக்களை ஏமாற்றுவதாக நான் கூறுவேன் – மு.க ஸ்டாலின் பதிலடி!

நாங்கள் மிட்டாய் குடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள் , நீங்கள் அல்வா குடுத்து ஏமாற்றுவதாக நான் கூறுகிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுத்திக்கான நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை … Read more

கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொண்டார்.அங்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அத்திவரதரை தரிசனம் செய்தார் .இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து மதத்தினரும் தங்களது மத கோட்பாட்டை கடைபிடிக்க உரிமை உண்டு.கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்-முதலமைச்சர் பழனிசாமிக்கு தினகரன் கோரிக்கை

முதலமைச்சர் பழனிசாமிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவலை போல பாடப்புத்தகங்களில் இருக்கும். குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றைத் திரித்து பாடங்களைத் தயாரித்தவர்கள், இனிமேல் அரசு சார்ந்த எந்த குழுக்களிலும் இடம்பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார்.

ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவுக்கு வில்லியா ரேவதி?! வெளியான ருசிகர தகவல்!

நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.  ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படமானது டார்க் பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக படத்தில் … Read more

ஆஷஸ் தொடரில் தேர்வான ஆர்ச்சர் – மீண்டும் துணை கேப்டனாக ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலக அளவில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்  பெற்று உள்ளார்.  ஆர்ச்சருக்கு  இது முதலாவது டெஸ்ட் தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல மிகவும் உறுதியாக … Read more