மறைந்த அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி  உயிரிழந்தார். இதனையடுத்து அருண்ஜெட்லி உடல்  ஆகஸ்ட் 25-ஆம் தேதி  முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின்  உடல் தகனம்  செய்யப்பட்டது.அங்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மக்களவை … Read more

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவரும் மாரிதாஸ்! திமுக போலீசில் புகார் கொடுக்கும் அளவிற்க்கு என்ன கூறினார்?!

மாரிதாஸ், இவர் இணையதள பக்கமான யூ-டியூபில் ஒரு சேனல் நடத்திவருகிறார். இந்த யூ-டியூப் சேனலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பாகிஸ்தானிற்கும், திமுகவுக்கும் தொடர்புள்ளது என்பது போல வீடியோவிற்கு  தலைப்பாக வைத்து உள்ளே பாகிஸ்தானையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக மீது அவதூறு பரப்பியதாகவும்,  தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் வீடியோ வெளியிட்டு … Read more

கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட இந்தி பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும் கூட.  இவர் அதிகமாக இந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram   #Chhichhore … Read more

பற்றி எரியும் தீயை அணைக்க உதவ முன்வந்த ஜி 7 நாடுகள்!உதவியை நிராகரித்த பிரேசில்

உலகின் நுரையீரல் என்று அனைவராலும் கருதப்படும் அமேசான் காட்டில் சில நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. அமேசான் காடு  பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும்.இந்த ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இந்த காட்டின் பெரும்பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாகவே அமேசான் காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.தீயை அணைக்க பிரேசில் நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.பல்வேறு நாடுகளின் … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த மனித வடிவிலான ரோபோ..!

கஜகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலமாக ஃபெடோர் என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.  அங்கு இந்த ரோபோ மின் இணைப்புகளை சரி செய்தல் , தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளது. இந்த ரோபோ 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் … Read more

சினிமா ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். இவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம், ‘உரிமைகீதம்’. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 460 படங்கள் திரைக்கு வராமலேயே உள்ளதாகவும், இதனால், கோடி கணக்கான பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிக வருமானம் பெறும் கதாநாயகர்கள் திரைத்துறையை காக்க முன்வர வேண்டும் என்றும், சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்த பும்ரா..!

இந்தியா  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா  8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைபறித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி சார்பில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட் பறித்த வீரர் என்ற சாதனை … Read more

மும்பை மற்றும் கோவாவில் கோலாகலமாக நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொள்ளைகளமகா அடுத்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, இந்தியாவில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும், மும்பை மாநகரில் உள்ள கிர்கவ்ம் சௌபாட்டி எனும் கடற்கறை  இடத்தில் மட்டும்  10 நாட்களுக்கு மேலாக பூஜை செய்யப்பட்ட சுமார் 10,000 விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்படும். அதே போல கோவாவில் கிருஸ்தவர்கள் … Read more

இன்றைய (ஆகஸ்ட் 27) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி , பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.86 காசுகளாகவும் , டீசல்லிட்டருக்கு ரூ. 69.04 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

உயர் அதிகாரியை கொன்றுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை !

சென்னை  அருகே பல்லாவரத்தில்  ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை  அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இந்த ராணுவ குடியிருப்பில் ராணுவ அகாடமியில் பணியாற்றி வருபவர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள பிரவீன் குமாருக்கும், ரைபிள் மேன் ஜெகசீருக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் நேற்று இரவு பிரவீண்குமாரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார் ஜெகசீர். பிரவீண்குமாரை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார் ஜெகசீர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் … Read more