மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பத்மவிபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம், கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல திரை உலகில் 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பாடும் நிலா எனும் பெயர் எடுத்தவர் தான் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

சினிமாத் துறையில் செல்லமாக பாலு என அழைக்கப்படும் இவர், கடந்த வருடம் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, அதன் விளைவாக இவ்வுலகை விட்டு மறைந்தார். இந்நிலையில், ஏற்கனவே ஆறு முறை தேசிய விருதும், பல்வேறு மாநில விருதுகளும், பத்மஸ்ரீ பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்ற இவருக்கு தற்பொழுதும் மற்றொரு கவுரவிப்பாக பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து கவுரவித்துள்ளது.

author avatar
Rebekal