ஆக்சிஜன் இல்லையெனில் தலைநகர் சீரழிந்துவிடும்! – டெல்லி அரசு

480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிடில் டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு நேர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், டெல்லி மருத்துவமனைகளுக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் டெல்லி சீரழிந்துவிடும் என மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிய நோயாளிகள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் டெல்லியிலுள்ள 120 மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது எனவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்றும் 120 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சென்று சேருவதை உறுதிப்படுத்த 10 அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

4 mins ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…

5 mins ago

மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழா  -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன்…

9 mins ago

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள்…

14 mins ago

இஸ்ரேல் ராணுவ ஒப்பந்த சர்ச்சை.! 28 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய கூகுள்.!

Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான…

23 mins ago

கண்டிப்பா ஷிவம் துபே உலகக்கோப்பையில் விளையாடனும்! புகழ்ந்த டிவில்லியர்ஸ் !

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த…

58 mins ago