வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி – தங்கம் தென்னரசு..!

சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் மூலம் மூலமாக தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நெதர்லாந்து சீனா போன்ற நாடுகளிலிருந்து  கன்டெய்னர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் மூலம் மூலமாக தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தடைப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்கள் கழித்து தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தங்கம் தென்னரசு கூறினார்.

author avatar
murugan