ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – டெல்லி அரசு

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட மறுக்கும் மக்களின் அலட்சிய போக்கு தான், அதிகளாவிலான தொற்று பரவுவதற்கு காரணமாகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக, ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாகுறை காணப்படுகிறது.

அஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாக காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், http://delhi.gov.in விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் கொரோனா பரிசோனை செய்யப்பட்ட நேர்மறை சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.