திருவள்ளூரில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு.!

திருவள்ளூரில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறது.

தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள திரையரங்குகளில் புதுப்படங்களை திரையிடவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் திரையரைங்கிற்க்கு வருவது குறையும் என்பதற்க்காக திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube