27 C
Chennai
Sunday, October 24, 2021

டெல்லியை வீழ்த்தி; இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

கொல்கத்தா அணி 19.5 ஓவர் முடிவில் 136 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இன்றைய 2-வது தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி அணி தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்க வந்த வேகத்தில் பிரித்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கினார்.

நீண்ட போட்டிகளுக்கு பிறகு களம் கண்ட மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 18 ரன்களில் சிவம் மாவி ஓவரில் போல்ட் ஆனார். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 36 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து  கேப்டன் ரிஷப் பந்த் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க டெல்லி அணி திணறியது. ஆனாலும், கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் 38 பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்மித்திடம் கேட்சை கொடுத்து 55 ரன்னில் வெளியேறினர். பின்னர் இறங்கிய நிதிஷ் ராணா 13 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், 46 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன் ஆகியோர் டக் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இறுதியாக கொல்கத்தா அணி 19.5 ஓவர் முடிவில் 136 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். டெல்லி அணியில் ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

இதனால் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More