மல்யுத்த வீரர்களின் போராட்டம் பிரிஜ் பூஷனுக்கு எதிரானது, அரசுக்கு அல்ல என்று சக்ஷி மாலிக் மற்றும் சத்யவர்த் காடியன் வீடியோ மூலம் பதிலளித்துள்ளனர்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இதனையடுத்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், ஜூன் 15 வரை எந்தவித போராட்டமும் இல்லை என்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் ஹூடா போராட்டத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, அதற்கு பதிலளிக்கும் விதமாக மல்யுத்த வீரர்கள் சக்ஷி மாலிக் மற்றும் சத்யவர்த் காடியன் வீடியோ மூலம் பதிலளித்துள்ளனர். அதில், தங்களின் போராட்டம் பிரிஜ் பூஷனுக்கு எதிரானது என்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளனர்.
The Truth.#WrestlersProtest pic.twitter.com/eWHRpOSwD9
— Sakshee Malikkh (@SakshiMalik) June 17, 2023
மேலும், ஜந்தர் மந்தரில் நாங்கள் முதல் முறையாக எங்கள் போராட்டத்தை ஜனவரியில் தொடங்கினோம். போராட்டத்திற்கு பாஜக தலைவர்கள் இருவரால் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு எப்படி காங்கிரஸ் கட்சியால் போராட்டம் நடத்தப்பட்டது.? என்று கூறமுடியும் என மல்யுத்த வீரர் சத்யவர்த் காடியன் கூறினார்.