முதலையை கொன்று சாப்பிடும் ஒடிசா மாநிலத்தவர்கள் மீது விசாரணை!

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கலடபள்ளி எனும் கிராமத்தில் முதலையை

By Rebekal | Published: Jul 03, 2020 01:33 PM

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கலடபள்ளி எனும் கிராமத்தில் முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கலடபள்ளி எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை கிராம மக்கள் ஒன்று கூடி அங்கு 5 அடி நீளமுள்ள ஊர்வன ஒன்று இருப்பதாக சந்தேகித்தனர். இதனையடுத்து அந்த விஷயத்தை அவர்கள் கையில் எடுத்து, அங்குள்ள சபேரி என்னும் ஆற்றில் முதலை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பின்பு அதனை பிடித்து, தொண்டையை கிழித்து அதன் இறைச்சியை அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளதால் வைரலாகி வன அதிகாரிகள் பார்வைக்கு சென்றுள்ளது. ஒடிசா மாநிலத்தின் வனத் துறை அதிகாரியான பிரதாப் முதலை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவத்தின்போது முதலையைக் கொன்று உண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக வந்ததால், எங்களது ஊழியர்களை உடனடியாக கிராமத்துக்கு அனுப்பினோம். ஆனால் அந்த முதலையின் எந்த ஒரு உடல் பாகங்களையும் எங்கள் ஊழியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் மூன்று அணிகளாக அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc