விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்…!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக,  சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் அனுமதி கேட்டு, சிறுவனின் இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரலை சேகரித்தனர்.

இதயம் மற்றும் நுரையீரல் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. கல்லீரல்  மட்டும், கல்லீரல் செயலிழந்து நோயாளி இருந்த மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் வாஸ்குலர் கூறுகையில், நாங்கள் எவ்வளவோ முயன்றும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. குழந்தையின் இறப்புக்கு மருத்துவமனையின் இதய பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உறுப்பு தானம் செய்ய அனுமதி தந்த தங்களது தாராளமான மனதிற்க்கு நன்றியை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.