உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை..!

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 

தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘”உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”. அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு. அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு, இறந்த உலமா ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்று வந்த ஓய்வூதியத்தில் சதவீதம், இறந்த ஓய்வூதியதாரரின் நேரடி 50 வாரிசுதாரர்களில் ஒருவருக்கு உலமா குடும்ப ஓய்வூதியமாக அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது. மேலும், இத்திட்டத்திற்கான செலவினம், 2202-05-102-AA 32705 என்ற கணக்கு தலைப்பின் கீழ் உலமா ஓய்வூதியத்திற்காக ஆண்டுதோறும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து மேற்கொள்ளவும் அரசு ஆணையிடுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here