கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் , கடமை மத்திய அரசுக்கு உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு  வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12-ன் படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்.டி.எம்.ஏ.வின் கடமை எனவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து. கடந்த ஆண்டு இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் இதுவரை கொரோனா தொற்றால் 3,98,454 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube