வாக்காளர் சீட்டு வீடுகள் தோறும் வழங்க உத்தரவு – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பதாகவே வாக்கு தகவல் சீட்டை,வீடுகள் தோறும் சென்று வழங்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களுக்கு தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழக்ங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த தேர்தலில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பதாகவே வாக்கு தகவல் சீட்டை,வீடுகள் தோறும் சென்று வழங்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.