அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை.!

அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை.!

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் உள்ளட்டவை குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதி பணிகிடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தைப்பெற்று வருகிறது. அதில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் என ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் ஒரு சில கட்சிகளுடன் இழுபறி நீடித்து வருவதால் விரைவில் அதற்கும் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணலை முடித்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube