#BREAKING : குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- கமல் கட்சி வழக்கு

  • குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு  எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.குறிப்பாக அசாம்,திரிபுரா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் அதிகரித்து வருகிறது.இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருகின்றது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே  இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.