எதிர்க்கட்சி தொடர் அமளி – மீண்டும் மாநிலங்களவை ஒத்திவைப்பு.!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.

இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.அவை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை மீண்டும் ஒத்திவைத்து சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்