வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்

வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில்  சந்தித்தார் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் .இதன் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் கூறினோம்.எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தும் மசோதாவை எப்படி நிறைவேற்றினார்கள் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube