அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, ஊழலை ஊக்குவிக்க பெங்களூருவில் கூடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்று வழங்குகின்றனர். மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுப்பதாக சாடிய மோடி, ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.
ஆனால், பாஜக அரசு, 9 ஆண்டுகளில் பழைய அரசின் தவறுகளை திருத்தி, மக்களுக்கு புதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது என தெரிவித்தார். இந்தியாவின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.
சில கட்சிகளின் சுயநல அரசியலால் முக்கிய நகரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுப்பதாக சாடிய பிரதமர், பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவில் சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது. குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கை என காட்டத்துடன் பிரதமர் மோடி புதிய விமான நிலைய திறப்பு விழாவில் உரையாற்றியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் கால அளவே உள்ளதால் பிரதான கட்சிகள் தேர்தல் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆளும் கட்சியான பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்கள் இன்று டெல்லியில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டமானது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆந்திராவில் இருந்து ஜனசேனா, உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல் இந்தியாவெங்கும் பிரதான பாஜக ஆதரவு கட்சிகள் என மொத்தமாக 34 அரசியல் கட்சிகள் இந்த கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,
ஏற்கனவே, ஆளும் பாஜகவுக்கு எதிராக 24 எதிர்கட்சிகள் தலைவர்கள் ஒன்றிணைந்து பெங்களூருவில் நேற்று மற்றும் இன்று 2 நாள் ஆலோசனை கூட்டத்தை நடத்துகின்றனர். முன்னதாக, பாட்னாவில் முதற்கூட்டம் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது