டெல்லியில் மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவார், ராகுல் காந்தி தலைமையில் எதிரிக்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பேரணி.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டது.

நேற்று அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன. கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவார், எம்பியுமான ராகுல் காந்தி தலைமையில் எதிரிக்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி பேரணி மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் ஊடகங்கள் முன்பு பேசுகிறோம். பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு விவாதிக்க மறுத்ததை மக்களிடம் தெரிவிக்கவே இந்த பேரணி என்றும் ஜநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்..

நாட்டின் 60% மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது, அவமானப்படுத்தப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்ததை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்று எதிரிக்கட்சிகள் குற்றசாட்டினர். மேலும், நாடாளுமன்ற முடக்கத்திற்கு பாஜகவே காரணம் என திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார்.

இந்த பேரணியில், திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா கட்சி உள்ளிட்ட கிட்டத்தட்ட 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்