கல்லணையில் இருந்து சாகுபடிக்காக நீர் திறப்பு.!

கல்லணையில் இருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து நீர் திறக்கப்படும் நிகழ்ச்சியில் துரைக்கண்ணு, காமராஜர் பங்கேற்றனர். கல்லணை  அணையில் இருந்து  தண்ணீர் திறந்தததால்  தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

author avatar
murugan