பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.!

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.!

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி கடந்த சில நாட்களாக  பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .  அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பணன்,ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் அணையை திறந்து வைத்தனர்.

பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு திறந்துவிடப்படும் அணை திறப்பால் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube