ஆளுநரிடம் அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது. எங்களை பொருத்தவரை அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.ஆளுநரை பொருத்தவரை குடியரசு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆளுநரிடம் பேசும்போது அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும்.அந்த வகையில் நாங்கள் விடுதலை செய்யக்கோரி அழுத்தம் தான் கொடுத்துள்ளோம்.ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு ஆகும்.குடியரசுத்  தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.