இனி ஒரு ட்வீட்போதும் !சென்னை குடிநீர் பிரச்சினைக்கு புதிய முயற்சி

சென்னை இது தமிழகத்தின் தலைநகர் என்றாலும் தற்பொழுது குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதற்க்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆனால் நிலாவில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்யும் இந்த விஞ்ஞான உலகம் பூமியில் இருக்கும் வளங்களை அழிப்பது, அவற்றை பராமரிப்பு செய்யாமல் நாம் செய்யும் தவறே இந்த நிலைமைக்கு காரணம் .


இதனிடையில் சென்னை குடிநீர் வாரியம் ஒரு புது முயற்சியாக ஒரு ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சென்னை மக்கள் தங்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை ,பராமரிப்புயின்றி கிடைக்கும் குடிநீர் குழாய்கள் என மக்கள் தண்ணீர்க்காக சந்திக்கும் பிரச்சினைகளை இந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது .

குடிநீர் பிரச்சினைக்காக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பதை விட பிரச்சினை வராமல் இருக்க முறையான குடிநீர் பராமரிப்பு ,ஏரிகள் ,குளங்கள் தூர் வாருதல், மழை நீர் சேகரிப்பு என இது  போன்ற செயல்களை நம் கடமைகளாக அரசும் ,பொதுமக்களும் கடைபிடித்தாலே ஓர் அளவுக்கு குடிநீர் பிரச்னை நீங்கும் .

author avatar
Dinasuvadu desk