தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி!

மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும்

By surya | Published: Jul 08, 2020 07:23 AM

மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,132 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4999 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 352 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அங்கு கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உள்ளது. தாராவியில் கடந்த சில நாட்களாக கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியதே காரணம் என கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc