இன்று மட்டுமே 2300 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.!

இன்று 10 விமானங்கள் மூலம் 2300 இந்தியர்கள் இந்தியா வர உள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் 37 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவுக்கு வர முடியாமல் பல நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஓமன், ஆகிய 12  நாடுகளில்  சிக்கித் தவிக்கும் 14,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர இன்று முதல்மே  13 வரை 64 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று 10 விமானங்கள் மூலம் 2300 இந்தியர்கள் இந்தியா வர உள்ளனர். நாளை முதல் மே 13 ஆம் தேதி வரை வெளிநாட்டிலிருந்து மொத்தம் 11 சிறப்பு விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ளன.

 

author avatar
Dinasuvadu desk