ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்.. தமிழக அரசுக்கு அதிகாரமில்லை – மத்திய அரசு வாதம்

By

ONLINE GAMING

ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என மத்திய அரசு வாதம்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு வாதம் வைத்துள்ளது. மத்திய அரசு வாதத்தில், ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சட்டத்தில் கூறியுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதனால் மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முடியாது. மத்திய அரசின் சட்டப்படி ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மத்திய அரசு அவ்வாறு கூறியுள்ளது.