அடேங்கப்பா ! 9,000 அடி உயரத்தில் அமேசான் செய்த ” UNBOXING ” வீடியோ

அமேசான்,  9,000 அடி உயரத்தில் ONEPLUS 9 Pro 5G ஐ unboxing செய்யும் ஒரு வித்தியாசமான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் ONEPLUS 9 Pro 5G ஸ்மார்ட்போனை 9,000 அடி உயரத்தில் அறிமுகம் செய்யும்( unboxing ) செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனில் உள்ள 50MP கேமரா 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவு தரையிறக்க பயன்படுத்தப்பட்ட  கேமராவான  ‘ஹாசல்பாட் கேமராவின்’ அம்சங்களை கொண்டுள்ளது.மேலும் இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமேசான், “இனையதளங்களில்  ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பல வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது.அவை எல்லாம் ஒரே மாதிரியான முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.எனவே ONEPLUS 9 Pro யை 9,000 அடி உயரத்தில் சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு இப்படி ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டுள்ளோம். இது ஒன்பிளஸ் பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது”,என்று அமேசான் கூறியுள்ளது.