ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – விசிகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன்.!

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியீடு.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்தது. சமீபத்தில் அக்கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் கட்சியின் தேர்தலை அறிக்கையை வெளியிட்டார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்தோடு பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை மேற்கொள்ளும் தனியார்மயமாக்குதல் போன்ற சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம் – ஒரே கல்வி என்ற அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் என்பதை நடைமுறைப்படுத்த நடக்கும் முயற்சியை முறியடிப்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்