‘ONE PLUS PAY’ சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!

ONE PLUS தனது  டிஜிட்டல் கட்டண சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ONE PLUS ,கடந்த ஆண்டு முதல் சீனாவில் தனது சொந்த டிஜிட்டல் கட்டண சேவையை வழங்கியுள்ளது.அதற்கு ONE PLUS PAY என்று பெயர் வைத்துள்ளது.மேலும் ONE PLUS நிறுவனம், இந்த சேவையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விரைவில் கொண்டு வரும் என்று தெரிவிக்கிறது.

One Plus Pay சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வமான சான்றிதழ் பற்றிய தகவல்கள் சமீபத்தில் ட்விட்டரில் வெளியாகியுள்ளன .இவை இந்திய வர்த்தக மதிப்பெண்கள் பதிவேட்டில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது.எனினும் அதில் கூடுதல் விவரங்கள் எதுவும் குறிப்படவில்லை.

தற்போது, இந்திய டிஜிட்டல் கட்டணச் சேவையில் Paytm, GPay, PhonePe மற்றும் Whatsapp pay போன்ற நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.இதனால் One Plus Pay சவால்களை எதிர்கொள்ளும் என்று இந்திய தரப்பினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சீனாவில், One Plus Pay App மக்கள் பயன்படுத்துவதற்கு வேகமாக இருக்கிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது பல தனித்துவமான முக்கிய அம்சங்களுடன் வருகிறது, ONE PLUS ஸ்மார்ட்போனில் பவர் பட்டனை இரண்டு முறை தட்டுவதன் மூலம் One Plus Pay App அறிமுகமாகிறது.இதனால் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த One Plus Pay சேவையை மக்கள் ஒருமுறையாவது பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.