,
Edapadi palanisamy

அதிமுகவில் இருந்து ஒருவர் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி உத்தரவு..!

By

திருச்சி மாநகர் மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் திரு. J. அழகரசன் விஜய் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவு.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. J. அழகரசன் விஜய், (திருச்சி மாநகர் மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023