தூத்துக்குடியில் மேலும் ஒருவர் பலி! பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த கடலாடியை சேர்ந்த, 34 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 

நேற்று ஒருவர், கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

தூத்துக்குடியில், மொத்தம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 11 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. இந்த 38 பேரில் 2 பேர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.