வேலை இழந்ததால் தான் வேலை பார்த்த கம்பெனியையே ஹேக் செய்த ஐ.டி பட்டதாரி.!

டெல்லியை சேர்ந்த ஐடி பட்டதாரி ஒருவர், ஊரடங்கு காலத்தில் வேலை இழந்ததால், தான் வேலைபார்த்த கம்பெனியின் சர்வரையே ஹேக்கிங் செய்து கம்பெனிக்கு சுமார் 3 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த ஐடி பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வரும் விகேஷ் ஷர்மா எனும் ஐடி பட்டதாரி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊதிய விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஊரடங்கு சமயத்தில் அவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது.

இதனை பொறுத்துக்கொள்ளாத விகேஷ் ஷர்மா, தான் வேலைபார்த்து வந்த நிறுவனத்தில் பதியப்பட்டிருந்த 18,000 பேரின் தரவுகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 22,000 போலி தரவுகளை பதிந்திருந்தார். இதனால், அந்நிறுவனத்திற்கு சுமார் 3 லட்சம் இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை சரி செய்ய நிறுவனம் எப்படியும் தன்னை தான் திரும்ப அழைக்கும் என எண்ணம் கொண்டிருந்திருக்கிறார். இதனை அடுத்து, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ அளித்த புகாரின் பெயரில், போலீசார், ஹேக் செய்த ஐ.பி முகவரியை வைத்துக்கொண்டு விசாரணை நடத்தியதில், விகேஷ் ஷர்மா தான் இதனை செய்தது என கண்டுபிடித்துவிட்டனர்.

இதனை அடுத்து, டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வந்த விகேஷ் ஷர்மாவை போலீசார் கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.