இந்தியாவில் ஒரு லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு….! 2,500க்கு கீழ் சென்ற பலி எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,427 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,89,09,975 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,89,09,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் இறப்பு எண்ணிக்கை 2,427ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,49,186 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,74,399 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
  • இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,59,180  ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,01,609  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 23,27,86,482 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.