ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழப்பு.!

  • கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது.
  • ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்து உள்ளார்.

ஹாங்காங்கில் ஒருவர் பலி:

ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை மருத்துவமனையில் இறந்து உள்ளார். இறந்த அந்த நபர் சீனாவின் வுஹானுக்கு பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த மரணம்  சீனாவை தவிர வெளியில் பலியான இரண்டாவது மரணமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸை சார்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் எல்லையாக உள்ளது.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இன்றைய பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 64 பேர் இறந்து உள்ளனர்.