ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 18 கோடி தான்.! -செல்வராகவன் ட்வீட்.!

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவர் பட்ஜெட் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி போன்ற மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமே சென், பார்த்திபன், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்றே கூறலாம்.

இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவர் பட்ஜெட் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில் ” ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால் இது ஒரு மெகா பட்ஜெட் படம் என்று மக்களிடம் காண்பிப்பதற்காக 32 கோடி பட்ஜெட் என்று அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம் படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சராசரி படமாகக் கருதப்பட்டது. முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.