கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்.!

கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

kodiyil oruvan 3

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.  இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை

KodiyilOruvan

இந்த திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 3 நாட்களாக இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

kodiyil oruvan

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,  தமிழகத்தில் மட்டும் இந்த படம் 2.31கோடியும், சென்னையில் மட்டும் 18 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நாளுக்கு நாள் படத்தின் வரவேற்பும் வசூலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.