ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி ! பசித்தவர்களுக்கு தாயாக விளக்கும் இட்லி கடை!

இன்றைய காலகட்டத்தில் விலை வாசிகள் அதிகரித்து உள்ள நிலையில்  அரியலூர்  மாவட்டத்தின் ஜெயம்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள்நல்லூர் கிரமத்தில் உள்ள   ஒரு இட்லி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுகிறது.

இளையபெருமாள்நல்லூரில் காக்காபிள்ளை கடையென்றால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் அளவிற்கு இந்த இட்லி கடை பிரபலமடைந்து உள்ளது.ஏன் என்றால் இந்த இட்லி கடையில் காலையில் கூலி வேலைக்கு போகும் தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள் என அனைவரும் இந்த கடைக்கு வந்து விடுவார்கள்.

இந்த கடையை சிங்காரம்பிள்ளை , வள்ளி தம்பதி 1956-ம் ஆண்டு  அவர்கள் திருமணமான அடுத்த மூன்று நாள்களில் தொடங்கினர். இந்த கடையை தொடங்கும் போது 1 ரூபாய்க்கு 4 இட்லி  என விற்க தொடங்கினர்.

பின்னர் இவர்களது  பிள்ளைகள் 50 பைசாவிற்கு இட்லி விற்று தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் வள்ளி கூறுகையில் , நானும் எனது கணவரும் 4 மரக்கா வரை கையால்  இருவரும் அரிசி அரைத்து இட்லி விற்று வந்தோம்.

தற்போது தங்களின் மகன்கள் இந்த இட்லி கடையை நடத்தி வருவதாக கூறினார்.விலை வாசி உயர்ந்து உள்ள இந்த காலகட்டத்தில் 10 ரூபாய்க்கு வயிறு நிறைய உணவு கொடுக்கும் இந்த கடை பசித்தர்வர்களுக்கு தாயாக உள்ளது.

author avatar
murugan