ஒரு நாள் சபாநாயகராக நாடாளுமன்றத்தில் செயல்பட்ட ஆ.ராசா !

17 வது நாடாளுமன்ற அவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா அவர்கள் நேற்றைய தினம் விடுப்பில் இருந்ததால் அவர்க்கு பதிலாக நீலகிரி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் “ஒரு நாள் சபாநாயகராக” அவையில் செயல்பட்டார்.

சபாநாயகர் இல்லாத சமயங்களில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகராக செயல்பட்டு அவையை நடத்தலாம் என்ற விதியின் படி நேற்று நடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தது.  நாடாளுமன்றதில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக சார்பில் ஆ.ராசா அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவையில், கல்லூரி ஆசிரியர் நியமன மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பத்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய முறையில் பதிலளித்து வந்தனர்.

அப்போது, கேரள மாநிலம் மாவேலிக்கரை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் கொடிகுனில் அவர்கள் அவரது தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். உடனே குறுக்கிட்ட, ஆ.ராசா கருத்தை சுருக்கமாக பேசி முடியுங்கள் என்று கூறியுள்ளார். அமைச்சர்கள் அவருக்கு பதில் தாருங்கள் என்று அவையில் பேசியுள்ளார்.