ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ..!ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம் ..!விளக்கம் அளித்த தேர்வுக்குழு தலைவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர்  ரிஷப் பண்ட் ஏன் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்  விளக்கம் அளித்துள்ளார் .

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய படைகள் பிசிசிஐயின் 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்ததுள்ளது.மேலும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.

இதன் பின்  இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 12-ம் தேதி நடைபெற  இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர்  ரிஷப் பண்ட் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.இந்நிலையில் இதற்கு இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்  விளக்கம் அளித்துள்ளார் .உலகக் கோப்பை அணிக்கான விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக ரிஷப் பண்ட் இருப்பார் என்பதால் அவருடைய வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள சில காயங்கள் குணமடைந்து அவர் மிகவும் வலிமையானவராக மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.