,

ஒரே டான்ஸ்! ஒரே முத்தம் தான் ஷாருக்கானுடன் அனிருத்…வைரலாகும் புகைப்படங்கள்!

By

ani and Shah Rukh Khan

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி ஹிந்தி, தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா என பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவின் போது பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது.

குறிப்பாக விழாவிற்கு மாஸ் எண்டரி கொடுத்த ஷாருக்கான் அனிருத்தை கட்டியணைத்து பாசத்துடன் கன்னத்தில் முத்தமிட்டார். அதனை தொடர்ந்து வந்த இடம் பாடலை மேடையில் பாட மேடைக்கு வந்த அனிருத் ஷாருக்கானையும் கையில் பிடித்து அழைத்துக்கொண்டு மேடைக்கு வரவழைத்து நடனம் ஆட வைத்தார்.

அது தொடர்பான வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில், ஏற்கனவே அனிருத்துக்கு வரும்போதே ஷாருக்கான் முத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாக அனிருத் வந்த இடம் பாடலை பாடி முடித்த பிறகும் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்களை அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.