கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள், டிரைலர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னதாக இந்த திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் தற்போது தியரையரங்குகள் 50 % பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 17-ஆம் தேதி உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.