தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தந்தைக்காக கவிதை எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று உலகம் முழுக்க தந்தையர் தினம் கொண்டாடப்டுகிறது. பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் நினைவாக கவிதை ஒன்றை எழுதி டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வரின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக, மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், டிவிட் செய்துள்ளார். அதில், உங்களால் கருவானேன். உங்களால் செதுக்கப்பட்டேன். நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன். என பதிவிட்டுள்ளார்.
உங்களால் கருவானேன்.
உங்களால் செதுக்கப்பட்டேன்.
நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.
நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்.#FathersDay#கலைஞர்100 pic.twitter.com/kjj75AGuep— M.K.Stalin (@mkstalin) June 18, 2023