15ஆம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-திமுக தலைமை அறிவிப்பு

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்  ஆகஸ்ட் 5 -ஆம் தேதி அங்கு  வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திமுக வெளியிட்ட அறிவிப்பில்,  வரும் 15ஆம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 5 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறும் .  வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடைபெறும் நிலையில்  ஆலோசனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.