12-ஆம் தேதி ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ..!

வரும் 12-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 12-ஆம் தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி பிஎஸ்எல்வி 51 ராக்கெட் மூலம் பிரேசிலைச் சேர்ந்த அமேசோனியா பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனால், நடப்பு ஆண்டு 2-வது ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. இதற்கான கவுண்ட் டவுன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

author avatar
murugan