ஒமிக்ரான் வைரஸ் பரவல் : தெற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்த இலங்கை அரசு!

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தெற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு இலங்கை அரசு பயணத்தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கமே தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது.

மேலும் இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால், உலக நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்க பயணிகளுக்கு பயண தடையை விதித்துள்ளது.

அந்த வகையில் இலங்கை அரசும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் அதன் அண்டை நாடான இங்கிலாந்து, போட்ஸ்வான் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கும் இலங்கை அரசு பயணத் தடை விதித்துள்ளது.

author avatar
Rebekal