ஓமிக்ரான்: 61 பேருக்கு கொரோனா உறுதி நெதர்லாந்தில் பரபரப்பு..!

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த 61 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது எனவும் இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும் Omicron வகைகளின் புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு (ஓமிக்ரான் ) பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் புதிய ஓமிக்ரான் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் நெதர்லாந்துக்கு வந்த மொத்தம் 61 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் மொத்தம் 600 பயணிகள் வந்தனர். அப்போது, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்த 539 பயணிகள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 61 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றிய ‘ஓமிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களாக..? என்பது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது தாயகம் திரும்பும் நெதர்லாந்தை சார்ந்தவர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan