ஓமைக்ரான் கட்டுப்பாடுகள் – திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர்..!

நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன்  தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதனையடுத்து, நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன்  தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். ஆர்டெர்ன் மற்றும் நீண்ட கால கூட்டாளியான கிளார்க் கேஃபோர்ட் அவர்களின் திருமண தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்தில் இதுவரை 15,104  பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.