ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல – அமெரிக்க விஞ்ஞானி!

ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல என அமெரிக்க விஞ்ஞானி ஆண்டனி ஃபாசி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரோன் கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனவை விட வீரியமானது இல்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கும் எனவும், தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி இதற்கு எதிராக இருக்குமா  என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal