3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்ட உமர் காலித்..?

3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்ட உமர் காலித்..?

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் உமர் காலித் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினால் கடந்த மாதம் செப்டம்பர் 13 -ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உமர் காலித்திடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

அடுத்த நாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம் காலித்தை  10 நாட்கள் டெல்லி காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. செப்டம்பர் 24-ம் தேதி உடன்  காவல்துறை  காவல் அவகாசம் முடிந்த நிலையில்,  உமர் காலித்தை, பின்னர் அக்டோபர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உமர் காலித் நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில், மீண்டும் போலீசார் மூன்று நாள் ரிமாண்டில் அழைத்துச் சென்றது என கூறப்படுகிறது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube